கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பீஹாரில் பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லல்லு பிரசாத் யாதவ் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கங்கை நதியில் வெள்ள அபாய அளவை தாண்டி ஓடுவதால் பிஹார் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ள நிலமையை சமாளிக்க உதவும் படி பீஹார் அரசு சாரிபில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீஹார் வெள்ளம் குறுத்து லல்லு பிரசாத்திடம் கேட்டபோது "இது அதிர்ஷ்டமானதுதானே! கங்கை நதி நம் வீட்டுக்கே தேடி வந்துள்ளத. இது வரவேற்கத்தக்கது. எப்போதும் நாம் தான் கங்கையை தேடி செல்ல வேண்டும். இப்போது பீஹாரில் வீட்டைத்தேடி கங்கை வந்துள்ளது" என கூறினார்.
பா.ஜ.கவின் கங்கை நீர் விற்பனையை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

No comments:
Write comments