கஷ்மீரில் பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார்.
கஷ்மீரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு தீர்வு காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் கஷ்மீர் சென்று அங்குள்ள எதிர்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபாவோடு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும்போது "கஷ்மீரில் இதுவரை 20க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். இரண்டு நாளில் 300க்கும் மேற்பட்ட நபர்களை சந்தித்து கஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாநிலத்தில் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். கஷ்மீரில் நடக்கும் கலவரத்தில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. கஷ்மீரில் இளைஞர்கள் பலியாவது வேதனை அளிக்கிறது. இளைஞர்களை தவறாக வழி நடத்துபவர்களை கண்டறிய வேண்டும். இங்கு அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகின்றனர். கஷ்மீர் பிரச்சனை மத்திய அரசுக்கு கவலையை அளிக்கிறது.
காஷ்மீர் வெள்ளத்தின் போது ராணுவத்தின் உதவியை யாரும் மறந்து விடக்கூடாது. கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள இராணுவத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கஷ்மீர் குறித்த நிபுணர் குழு அறிக்கை 2 அல்லது 4 நாளில் கிடைத்து விடும். பிரச்னைக்கு தீர்வு காண மாற்று கொள்கைகள் கொண்டவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பேச்சுவார்த்தை, மக்கள் உணர்வு அடிப்படையில் நடக்கும். காஷ்மீர் குறித்து அனைவருடனும் பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பெருமையை சீர்குலைக்க சதி நடக்கிறது. காஷ்மீருக்கு விரைவில் அனைத்து கட்சி குழு வரும் என்றார்.
பெல்லட் குண்டுகளுக்கு மாற்று நடவடிக்கை பயன்படுத்த வேண்டுமென்பதை ஆலோசித்து வருகிறோம். கூடிய விரைவில் மாற்று வழி ஏற்படுத்தப்படும் என ராஜ்னாத் சிங் தெரிவித்தார்.

No comments:
Write comments