இத்தாலியை தொடர்ந்து மியான்மரிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியான்மரின் மத்திய பகுதியில் இன்று காலை 6.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 84 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
பண்டைய நகரமான பாகன் நகரத்தில் உள்ள புகழ்மிக்க பல்வேறு கோவில்களின் கோபுரங்கள் சேதம் அடைந்தன. இந்த கோவில்கள் அனைத்தும் 10-வது மற்றும் 14-வது நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டமைக்கப்பட்டவை ஆகும்.
2500க்கும் மேற்பட்ட புராதன புத்த நினைவுச்சின்னங்கள் அடங்கிய இப்பகுதிக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
மியான்மரில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, இந்தியா, வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளிலும் இருந்தது.

No comments:
Write comments