மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் சானியா-ஸ்டிரைகோவா ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் கோகோ வான்டேவேக்-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியை வீழ்த்தியது. சானியாவும், ஹிங்கிஸும் இணைந்து 14 சாம்பியன் பட்டங்கள் வென்றிருந்த நிலையில், அவர்களுடைய கூட்டணி சமீபத்தில் முறிந்தது.

No comments:
Write comments