Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 23, 2016

ஜெய்ஷாவின் குற்றச்சாட்டை விசாரிக்க வலியுறுத்தல்!


தடகள வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷாவின் குற்றச்சாட்டு குறித்து அரசு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் பஙகேற்ற போது இந்திய அதிகாரிகள் தண்ணீர் வழங்காததால் தான் உயிரிழக்கும் நிலைக்கு சென்றதாக தடகள வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த இந்திய தடகள சம்மேளன அதிகாரிகள் தண்ணீர் வழங்குவது போட்டி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என கைவிரித்தன.

அதிகாரிகளின் அலட்சியமான பதில் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெய்ஷாவின் குற்றச்சாட்டு குறித்து அரசு மவுனம் காக்காமல் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. தடகள வீராங்கனை ஜெய்ஷாவுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாதது வேதனையை அளித்துள்ளதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அதிகாரிகள் வீரர், வீராங்கனைகளை கண்டு கொள்ளமல் விட்டிருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1500 மீட்டர் ஓட்டபந்தையத்தில் பங்கேற்க விரும்பிய தன்னை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி ஒலிம்பிக் மாரத்தானில் கலந்து கொள்ள வைத்ததாக ஜெய்ஷா குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic