தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக தமிழக அரசியல்களத்தில் மோதிக் கொள்ளும் திமுக, அதிமுக கட்சிகளின் அரசியல் மோதல் இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறது.
திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த மோதலின் தொடக்கப்புள்ளி இருக்கைதான். அடுத்தடுத்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த அதிமுக-வின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது, அந்த விழா நடந்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பின்வரிசையில் பத்தோடு பதினொன்றாக இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரில் தோல்வியடைந்த சரத்குமாருக்கு முன்வரிசையில் இடமும், 89 உறுப்பினர்களை வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த திமுக-வின் எதிர்க்கட்சி தலைவருக்கு பின்வரிசையில் இடமும் ஒதுக்கிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்க, வழக்கமாக அமைதியாக இருக்கும் ஜெயலலிதா, அறிக்கைவிடும் அளவுக்கு போனார்.
திமுக-வையோ ஸ்டாலினையோ அவமதிக்கும் நோக்கம் எதுவும் தனக்கில்லை என்றும் ஸ்டாலின் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் முதல் வரிசையில் இடம் ஒதுக்கியிருக்க முடியும் என்றும் விளக்கம் கொடுத்தார் முதல்வர். ஆனால், மீண்டும் சட்டமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட வேண்டிய இருக்கை தொடர்பான சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. திமுக தலைவரும் திருவாரூர் எம்எல்ஏ-வுமான கருணாநிதி சட்டமன்றத்தில் அமர சிறப்பு இருக்கை ஏற்பாடு செய்யப்படவில்லை என்று திமுக-வினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சட்டமன்றச் செயலாளர், “அப்படி ஒரு கோரிக்கை முன் வைக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.
சமூக ஆர்வலர் மகாலிங்கம் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ‘உடல் ஊனமுற்றோர் குறிப்பாக நடக்க இயலாத எம்எல்ஏ-க்கள் அமர சட்டமன்றத்தில் அமர என்ன சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?’ என்று சட்டமன்றச் செயலகத்தில் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சட்ட மன்றச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன், “இந்தக் கூட்டத்தொடரில் தாங்கள் அமர சிறப்பு இருக்கை வேண்டும் என்று எந்த உறுப்பினரும் கோரிக்கை எழுப்பவில்லை” என்று கூறியிருக்கிறார். மேலும், “கடந்த இருபது ஆண்டுகளில் உடல் ஊனமுற்ற எம்எல்ஏ-க்கள் எத்தனை பேர் சட்டமன்றத்தில் பங்கெடுத்துள்ளார்கள். அவர்கள் சட்டமன்றத்தில் அமர என்ன சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது?” என்ற கேள்வியையும் இன்னொரு மனு மூலம் எழுப்பியிருந்தார்.
“இதுகுறித்த பதிவுகள் ஏதும் சட்டமன்றச் செயலகத்தில் இல்லை. தலைமைச் செயலகத்தில் இருக்கிறது” என்று சட்டமன்றச் செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் பதில் கூறியிருக்கிறார்.
“திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் சட்டமன்றத்துக்கு வருகை தர விருப்பத்தோடு இருக்கிறார். ஆனால், நடக்க இயலாத அவர் சட்டமன்றத்தில் அமர சிறப்பு இருக்கை இல்லை. இது ஒரு சாதாரண கோரிக்கை. ரயில் மற்றும் விமானங்களில்கூட இப்படிப்பட்ட சிறப்பு இருக்கைகள் இருக்கின்றன. 90 வயதைத் தாண்டிய ஒரு எம்எல்ஏ-வுக்கு இந்தச் சலுகையை செய்ய சட்டமன்றச் செயலகம் ஏன் தவறியது என்று தெரியவில்லை. கேட்டால் ஒருவரும் அப்படியொரு கோரிக்கையை எழுப்பவில்லை என்று சட்டமன்றச் செயலாளர் கூறுகிறார்” என்று கூறுகிறார் சமூக ஆர்வலர் மகாலிங்கம்.
இருக்கை விவகாரம்… நடந்தது என்ன?
முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பே திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘உரிய முறையில் இருக்கை வசதி ஏற்பாடு செய்து தந்தால் திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பது தொடர்பாக பரிசீலனை செய்வார்’ என்றார். திமுக கொறடா அர.சக்கரபாணி திமுக உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்குமாறு பேரவைத் தலைவரிடம் மனு கொடுக்க, இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. 93 வயதை தொட்டு விட்ட திமுக தலைவர் கருணாநிதியால் அந்த இருக்கையில் வந்து அமரும் வகையில் வசதி இல்லை என்பதால் இது தொடர்பாக ஸ்டாலின் புகார் சொல்ல அதிமுக உறுப்பினர் ஒ.பன்னீர்செல்வம், ‘பேரவைத் தலைவருக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி ஸ்டாலின் அளித்த கடிதத்தில் திமுக உறுப்பினர்களுக்கு எந்த வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற பட்டியலில் கருணாநிதியின் பெயரே இல்லை’ என்று தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் வயதானவர்கள் தமிழக சட்டமன்றத்தில் அமர்வதற்கான இருக்கை வசதிகள் இல்லை என்பதும் அரசியல் காரணங்களுக்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்பதும் உறுதியாகியிருக்கிறது.

No comments:
Write comments