Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

பசுவதை குறித்து பேசிய அமைச்சருக்கு கொலை மிரட்டல்...!


பசுவதை தடைச்சட்டம் அவசியமற்றது என்று பேசியதற்காக தன்னை கொலைசெய்யப் போவதாக உடுப்பியை சேர்ந்த சுனில் என்பவர் கொலைமிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதாக முன்னாள் அமைச்சர் லலிதாநாயக் கூறியுள்ளார்.

இது குறித்து தும்கூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அண்மையில் சிக்மகளூரு மாவட்டம், ஜெயபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பசுவதை தடைச்சட்டம் தேவையற்றது. அதற்காக ஏன் போராட வேண்டும் என்று பேசினேன். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு உடுப்பியை சேர்ந்த சுனில் என்பவர் பெங்களூரு, சஞ்சய்நகரில் உள்ள எனது இல்லத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், "தங்களை போன்றவர்களை வாழவிட்டால் பசுக்களை எப்படி வாழ வைக்கமுடியும். பசுக்கள் கடவுளுக்கு நிகரானவை. அவற்றை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். ஆனால் உங்களை போன்றவர்களால் பசுக்களை வாழ வைக்க முடியாது" என்றும் உன்னை கொலை செய்துவிடுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு ஆபாச கடிதம் என்று காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. ஆனால் நண்பர்களின் நெருக்கடி காரணமாக, இந்த விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளேன். விரைவில் இந்த கடிதம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic