Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு!



இந்துக்களின் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் வலியுறுத்திய ஆலோசனைக்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஆக்ராவில் பள்ளிக்கூட நிகழ்ச்சின் ஒன்றில் பங்கெடுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நாட்டில் பிற மதத்தவர்களின் மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் போது இந்துக்களின் மக்கள் தொகை மட்டும் ஏன் குறைந்து வருகிறது. இந்துக்களின் எண்ணிக்கையை உயரவிடாமல் தடுக்கும் சட்டம் எது? என கேள்வி எழுப்பினார். இந்துக்கள் தங்கள் மக்கள் தொகையினை பெருக்கிக்கொள்ள அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனை கண்டித்து சிவசேனா கட்சி சார்பில் அவர்களது அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது "காலாவதியான கருத்தை நவீன முறையில் வழங்க மோகன் பகவத் முயற்சிக்கிறார். அவரது கருத்தை பிற்போக்கு எண்ணம் கொண்ட இந்துக்கள் மற்றுமே ஏற்றுக்கொள்வார்கள். இந்துக்களின் மக்கள் தொகையை அதிகரிப்பதன் மூலமாகவே முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்த பதிலடி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கும் நாட்டிற்கு ஆபத்து என்றாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக பொது சிவில் சட்டத்தை அமுலபடுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு இந்துக்களை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள சொல்வது என்பது முட்டாள்தனமாகும். அப்படி செய்வதின் பட்சத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் தான் உயரும்" என சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic