இத்தாலியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய இத்தாலியில் உள்ள நார்சியா பகுதியை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.30 மணியளவில் அந்நாட்டின் மையப்பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்களில் இந்த பூகம்பம் ஏற்பட்டது.
அக்குமோடி, அமட்ரீஸ் நகரங்களில் மட்டும் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், அர்குட்டா பகுதியில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த பூகம்பத்தில் மொத்தம் 38 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகளை் பல முறை உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் உதவ, மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 வாகனங்கள் உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

No comments:
Write comments