ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்து ஜல்லிக்கட்டை தமிழக சிறப்பாக நடத்தியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை எனவும் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர் என்றும், உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை பராமரிப்பதில் மிகப்பெரிய இடையூறு உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையால் காளைகள் இறைச்சிக்காக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று ஜல்லிக்கட்டு என்று கூடுதல் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய விளையாட்டை நடத்த தடையை விலக்கி உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் எத்தகைய கட்டுப்பாடுகள் விதித்தாலும் தமிழக அரசு ஏற்க தயார் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments