சவுதி அரேபியாவில் வேலை இழந்து, தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 26 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு உள்ள பல நிறுவனங்களில் தொழிலாளர்களாக உள்ளனர். அதில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து தவித்து வந்தனர். மேலும், இந்தியாவுக்கு திரும்ப வழியின்றி தவித்தனர். இதுகுறித்து சவுதி வாழ் இந்தியர்கள், தங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்ககோரி பல முறை கோரிக்கை விடுத்தும், அதற்கு மத்திய அரசு செவிசாய்க்காமல், டுவிட்டரில் மட்டும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், வேலையிழந்த இந்தியர்களை தங்கள் சொந்த செலவில் தாயகம் அனுப்பி வைப்பதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்தது. இதன் முதற்கட்டமாக 26 பேர் இன்று இந்தியாவிற்கு திரும்பினர். இதற்காக அவர்கள் அனைவரும் அந்நாட்டில் உள்ள ஜித்தா விமான நிலையத்தில் விமானம் மூலம் புறப்பட்டு இரவு இந்தியாவுக்கு வந்தனர்.

No comments:
Write comments