சுதந்திரத்திற்காக போராடியவர்களை பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து கொன்று குவித்த முன்னாள் வங்கதேச எம்.பி சகாவது ஹூசைனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானுடன் இணைந்திருந்த வங்கதேசத்தில், கடந்த 1971-ல் பாகிஸ் தானுக்கு எதிராக சுதந்திரப் போர் நடந்தது. அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக நடத்திய வன்முறையில் சுமார் 30 லட்சம் பேர் பலியாயினர். இதுதொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜமாத் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சகாவத் ஹுசைனுக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்போது, சகாவத் உட்பட 2 குற்றவாளிகள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

No comments:
Write comments