Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 23, 2016

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட ஐ.எஸ் தீவிரவாதிகளே மிகப்பெரும் அச்சுறுத்தல்!


பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டிலும், ஐஎஸ் தீவிரவாதிகளே அதிக அச்சுறுத்தலாக வளர்ந்திருக்கிறார்கள் என தேசிய புலனாய்வு அமைப்பின் டிஐஜி அலோக் மிட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பிரான்ஸ், துருக்கி, இங்கிலாந்து மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் ஐஎஸ் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்துகின்றனர். இந்தியாவிலும் அந்த அமைப்பு காலூன்ற கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஐஜி அலோக் மிட்டல் ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

ஐஎஸ் அமைப்பின் ஸ்லீப்பர் செல்களை தகர்ப்பதும், இந்திய இளைஞர்கள் அந்த அமைப்பில் சேராமல் தடுப்பதுமே அலோக் மிட்டலின் பணியாகும். அவர் கூறியிருப்பதாவது:   கடந்த 2014ம் ஆண்டு வரை, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அந்நாட்டில் உள்ள லக்‌ஷர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகளின் மீதே இந்திய புலனாய்வு அமைப்புகள் கவனம் செலுத்தி வந்தன. அந்த நிலை தற்போது மாறி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அதிக அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது.
 
கடந்தாண்டு மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆரீப் மஜீத் கைது செய்யப்பட்ட பிறகே, ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என தெரியவந்தது. மஜீத்தின் கைதுதான் எங்களின் முதல் வெற்றி. கடந்த 18 மாதமாகத்தான் ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் ஆள்சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், அதற்குள் ஏராளமான இளைஞர்களை அந்த அமைப்பு ஈர்த்துள்ளது. ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததாகவும், அந்த அமைப்பின் ஆதரவாளர்களாகவும் இருந்ததாக இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அதிகளவில் கைது செய்யப்பட்டவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.   இதுதொடர்பாக, இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 6 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

இதனால், அவர்களால் இந்தியாவில் பயங்கர தாக்குதல்கள் நடத்தப்படவும் வாய்ப்புள்ளது. இதே போலத்தான் ஐரோப்பிய நாடுகளில் நடந்த சமீபத்திய தீவிரவாத தாக்குதல்களில் பல, அங்கிருந்து ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதாகும். சமீபத்தில் கொல்கத்தாவில் கைதான ஐஎஸ் தீவிரவாதி அபு முசாவும், நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கொல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனாலும், இந்திய புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் விழிப்புடன் செயல்பட்டு, ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை கணிசமாக தடுத்துள்ளது. ஐதராபாத், பெங்களூரில் ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் பர்பானியில் தீவிரவாத தடுப்பு படையினர் ஐஎஸ் தீவிரவாதிகளை கைது செய்து, நாட்டில் பயங்கர தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான வேட்டை தொடரும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  தற்போது ஒட்டுமொத்த இந்தியாவில் எத்தனை இளைஞர்கள் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற சரியான தகவல் இல்லை என்றாலும், கிட்டத்தட்ட 7,000 முதல் 8,000 வரையிலான இளைஞர்கள் அந்த அமைப்பில் எந்நேரத்திலும் சேர தயாராகி வருவதாக அதிகாரிகள் அதிர்ச்சி அளிக்கிறார்கள். அதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈராக், சிரியாவுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.


ஐஎஸ் அமைப்புக்கு ஆன்லைனில்தான் ஆள் சேர்க்கப்படுகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து ஐஎஸ் அமைப்பில் சிலர் சேர்ப்பதாக அதிகாரி அலோக் மிட்டல் கூறி உள்ளார். அவர் கூறுகையில், ‘இதுவரை பதிவு செய்யப்பட்ட 8 வழக்கிலும், இளைஞர்கள் அந்த அமைப்பில் சேர்வதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள்தான். சமூக வலைதளம் மூலமாகத்தான் ஐஎஸ் அமைப்புக்கு பெரும்பாலும் ஆட்களை சேர்க்கிறார்கள். இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு கடும் சவாலாக உள்ளது. ஆனாலும், சமூக வலைதளங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். சர்ச்சைக்குரிய சிறிய சந்தேகத்தையும் ஒதுக்குவதில்லை’ என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic