தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க முடியாது என அதன் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமையின் நம்பிக்கையை இழந்த தலைவர்கள் என்னைப் பற்றி விமர்சித்து வருகின்றனர்.
நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டேன். தற்போது தமாகா, காங்கிரஸ் போல செயல்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிக்க முடியாமல் கட்சித் தலைமை திண்டாடி வரும் நிலையில், தமாகாவை விமர்சனம் செய்துதான் காங்கிரஸ் கட்சியின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தை எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்துவது சரியல்ல. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காய்ச்சலால் 5-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறை உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்.
விருதுநகர்- திருச்சி பயணிகள் ரயிலை செங்கல்பட்டு வரை நீட்டித்து, அந்த ரயிலுக்கு காமராஜர் பெயர் சூட்டி பகல்நேர விரைவு ரயிலாக இயக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிதிஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

No comments:
Write comments