Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 9, 2016

சந்திரபாபு நாயுடுக்கு த.வா.கட்சியின்ட் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை!


ஆந்திராவில் கூலி வேலைக்கு சென்ற 32 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சை வன்மையாக கண்டித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 32 தமிழர்களை செம்மரக்கடத்தல்காரர்கள் என கூறி ஆந்திர போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அனைத்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த சந்திரபாபு நாயுடு கூறும்போது "32 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது, அவர்கள் அனைவரும் குற்றவாளிகள். அவர்களை நல்லவர்கள் என யாரும் நியாயப்படுத்தக்கூடாது" என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சந்திர பாபு நாயுடுவின் இந்த திமிர் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. கைது செய்யப்பட்ட 32 தமிழர்களும் விடுவிக்கப்படாவிட்டா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கூலித்தொழிலுக்காக சென்றவர்களை கடத்தல்காரர்கள் என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். சந்திரபாபு நாயுடுவின் இந்த திமிர் பேச்சு நொந்துபோயுள்ள தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதாய் இருக்கிறது. தமிழர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் கடும் போராட்டம் வெடிக்கும் என்பதை எச்சரிக்கையாகவே தெரிவித்துக்கொள்கிறோம். ஆந்திர பேருந்துகளை தமிழகத்திற்குள் இயக்கவும், ஆந்திர அலுவலகங்களுக்கு எதிராக நின்று போராட வேண்டிய சூழ்நிலைக்கு எங்களை தள்ளிவிடவேண்டாம்" என வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுவிக்க ஜாமீன் மனு கோரப்பட்டுள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கூறியிருப்பதின் மூலம் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic