உலகநாயகன் கமல்ஹாசன் படைக்காத சாதனைகளே இல்லை. அவர் சாதனைகளை பாராட்டி ப்ரான்ஸ் அரசு அவருக்கு செவாலியர் விருது கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.
இதற்கு இவருக்கு நாடெங்கும் பாராட்டுக்கள் குவிய, இவருடைய நண்பர் ரஜினிகாந்தும் தன் வாழ்த்துக்களை டுவிட்டரில் கூறியுள்ளார். பல நடிகர்களுக்கு இது தான் உண்மையான நட்பு என நிரூபித்து விட்டனர்.
பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான செவாலியே விருது வென்ற கமல்ஹாசனுக்கு பல்வேறு துறையை சேர்ந்த விவிஐபிக்கள் பாராட்டு தெரிவித்து வருவதால் அவர் பாராட்டு மழையில் நனைந்து மூழ்கியுள்ளார்.
சிவாஜி கணேசனுக்கு பின்னர் ஒரு தமிழ் நடிகர், அதுவும் சிவாஜியின் நடிப்பை பின் தொடரும் ஒரு கலைஞனுக்கு இந்த விருது கிடைத்தது பெரும் பெருமையாக கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் ‘மிகப்பெரிய சாதனை புரிந்த கமல்ஹாசன் செவாலியே விருது பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் வாழ்த்து அமெரிக்காவின் வாழ்த்தாகவே கருதப்படுகிறது.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments