Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

கைது செய்யப்பட்டா பா.ஜ.க முன்னாள் தலைவர் ஜாமீனில் விடுதலை

உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க முன்னால் துணைத்தலைவர் தயாச‌ங்கர் சிங் இன்று காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநில பா.ஜ.கவின் துணைத்தலைவராக இருந்தவர் தயாசங்கர் சிங். இவர் கடந்த மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஜ்யபா எம்.பியுமான மாயவதியை கடுமையாக விமர்சனம் செய்தார். "மாயாவதி விபச்சாரியை விட மோசமானவர் என்றும், விபச்சாரியாவது காசு கொடுத்தால் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்" என்று தெரிவித்தார். தயாசங்கர் சிங்  பேசிய இந்த பேச்சால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் கொந்தளிப்பை ஏற்பட்டது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டங்கள் வெடித்தது.

இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படித்தியதை தொடர்ந்து தயாசங்கர் சிங்கை பா.ஜ.கவிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக பா.ஜ.க தலைமை செய்தி வெளியிட்டது, தயாசங்கர் சிங்கிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை கடந்த ஜூலை 29ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி அஜெய் குமார் ரூபாய் 1 லட்சத்திற்கா சூரிட்டி பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இதனை அடுத்து இன்று காலை தயாசங்கர் சிங் விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த தயாசங்கர் தனது மனைவியும், மகளும் உடல் நிலை சரியில்லாம இருக்கிறார்கள், எனவே அவர்களை பார்ப்பதற்காக லக்னோ செல்லவிருப்பதாக தெரிவித்தார்.

தயாசங்கர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியதை பகுஜன் சமாஜ் கட்சியினர் வன்மையாக கண்டித்துள்ளனர். மோசமான, அறுவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு ஒட்டு மொத்த தலித் சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். எனினும் உத்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக மேல் முறையீடு செய்யப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுசெயலாளர் சதீஷ் சந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic