"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" இப்படித்தான் பாடல் வரிகளை கேட்டிருப்போம். ஏன் நம்மில் பலரும் இதைத்தான் வாழ்க்கையில் அனுபவித்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் சற்று வித்தியாசமாக "சாதனை மேல் சாதனை போதாதுடா சாமி" என்று பாடிக்கொண்டிருப்பார் போல் தெரிகிறது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 200 மீட்டர் நீச்சல் போட்டியில் மைக்கேல் தங்க பதக்கம் வென்றிருக்கிறார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் அவர் பெற்ற மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இன்று நடைபெற்ற ஆடவர் 200 மீ. மெட்லி நீச்சல் போட்டியில், 54.66 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் பெற்றார். இந்த ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் பெறும் நான்காவது தங்கம் இது. ஏற்கெனவே அவர் 200 மீ. பட்டர்ஃபிளை, 4*200 மீ. ஃப்ரீஸ்டைல் தொடர், 4*100 மீ. ஃப்ரீஸ்டைல் ஆகியவற்றில் தங்கம் வென்றார்.
31 வயதான மைக்கேல் பெல்ப்ஸ், 2000-ம் ஆண்டில் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 15. அதன்மூலம் 68 ஆண்டுகால அமெரிக்க நீச்சல் வரலாற்றில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஒலிம்பிக்கில் பதக்கம் ஏதும் வெல்லாதபோதும், 200 மீ. பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், இரு வெண்கலம் வென்ற பெல்ப்ஸ், 2008-ல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற 8 பிரிவுகளிலும் தங்கம் வென்று புதிய சகாப்தம் படைத்தார். அதன்பிறகு 2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கம், இரு வெள்ளி வென்றார்.
இந்த நிலையில் இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள பெல்ப்ஸ் இதுவரை 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் 5-வது முறையாக பங்கேற்றுள்ள நீச்சல் வீரர் பெல்ப்ஸ், ரியோ போட்டிக்கு முன்பு ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவர் 3-வது பதக்கத்தை வென்றபோது ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவரான சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிஸாவின் 48 ஆண்டுகால சாதனையை (18 பதக்கம் வென்றது) முறியடித்தார்.

No comments:
Write comments