Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு தவ்கீத் ஜமாத் கண்டனம்



பக்ரீத் பண்டிகைகளுக்கு ஒட்டகம் வெட்டுவதற்கு தடைவிதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை தவ்கீத் ஜமாத் கண்டித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகையின் போது வெளி மாநிலங்களிலிருந்து ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு அறுக்கும் பழக்கம் இருந்துவருகிறது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர் மையம் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் ஒட்டகங்களை அறுப்பதற்கான முறையான அறுவை கூடங்கள் தமிழகத்தில் இல்லாததால் இதற்கு இடைக்கால தடைவிதிப்பதாக தெரிவித்தது.

இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்துவருகிறது. மத சுதந்திரத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதாகவும், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மத சம்பிரதாயங்களில் மத்திய அரசு தலையிட்டு ஒவ்வொன்றாக தடுத்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. சென்ன உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வரும் வியாழக்கிழமை மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் அறிவித்துள்ளது.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic