Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

பியுஷ் மானுஷ் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு


சேலத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரின் மேலாளரைத் தாக்கியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகேயுள்ள நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் மணிகண்டன். இவர் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பியூஷ் மானுஷ் சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

 இதனிடையே, தேசிய மக்கள் இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், பியூஷ் மானுஷ் சிறையில் தாக்கப்படவில்லை என்பதும், பியூஷ் மானுஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் வழக்குரைஞர் மணிகண்டன் அண்மையில் கூறியிருந்தார்.  இந்த நிலையில், நிலவாரப்பட்டியில் உள்ள மணிகண்டனின் வீட்டுக்கு, சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் மற்றும் அவரது உதவியாளர் சின்ராஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை சென்று, அவரது வீட்டை விடியோவில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

 இதைத் தட்டிக் கேட்ட மணிகண்டனின் மேலாளர் விஸ்வநாதனை, பியூஷ் மானுஷ், சின்ராஜ் உள்ளிட்டோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மல்லூர் காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் பியூஷ் மானுஷ், சின்ராஜ் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic