Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 24, 2016

கண் மூடி திறப்பதற்குள் சின்னாபின்னமாகிப்போன கிராமங்கள்!

 
இத்தாலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணை மூடி திறப்பதற்குள் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்தது. இத்தாலியின் எப்பிக் சென்ரோ என்னும் பகுதியில் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் இருந்த 4 கிராமங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

அங்கிருந்து வெளியாகியிருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது இயற்கையின் தாக்குதலுக்கு மனித குலத்தால் எதிர்கொள்ளவே முடியாது என்பதை உணர்த்துகிறது. 150 பேரை காணவில்லை என்றும், இதுவரை 35 பேர் பலியாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. நோர்சியா, அம்பிரியா, அமாட்ரிக் மற்றும் பெஸ்காரா ஆகிய கிராமங்கள் இந்த நில நடுக்கக்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதில் அம்பிரியா என்ற கிராமம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அனைத்து கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகிப்போனது. ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிக்டர் அளவு 6 வரை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில நடுக்கம் சுனாமியாக மாறி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்டது. ஆனால் இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளும் தாமாக முன் வந்து இத்தாலி நாட்டிற்கு உதவி செய்து வருகிறது. அமைதியாக ஒரு கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கண் மூடி திறப்பதற்குள் சொந்த வீடுகள், பள்ளிக்கூடங்கள், கடைகள் என அனைத்தையும் இழந்து தமது அடையாளத்தை தொலைத்து அகதிகளாக நிற்கிறார்கள். பல நூற்றாண்டு பழமையான இந்நகரங்கள் அங்குள்ள சிற்பங்கள், சிலைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டது. ஆனால் இன்று அனைத்தும் இந்த நில நடுக்கத்தில் அழிந்து போயின.



No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic