இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா மற்றும் ஹிஜாப் உடைகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென இலங்கையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே இந்த ஆலோசனையை முன்வைத்திருக்கிறார். இலங்கையின் புலனாய்வுச் சேவை ஒன்றின் உயர் அதிகாரியின் ஆலோசனையின் படியே பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி இந்த யோசனையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இந்த அதிகாரி இதற்கு முன் செயல்பட்ட அரசிலும் உயர் பதவியை வகித்தவராவார்.
பர்தா போன்ற இஸ்லாமிய பெண்கள் அணியும் உடைகலை அணிந்து கொண்டு, சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கவே இந்த உடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இலங்கையில் பிரதமர் ரனில் இந்த யோசனையை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. தமது அரசாங்கத்திற்கு இஸ்லாமியர்கள் அளித்து வரும் ஆதரவை பாதிக்கும் என்பதை அவர் உணர்ந்து இந்த திட்டத்தை நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Write comments