சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் துபாயில் தரையிர்ங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்படி தப்பி பிழைத்தவர் தான் முகமது பசீர் அப்துல் காதர் என்பவர்.
இந்த விபத்து நடந்த 6 நாட்களில் கழித்து முகமது பசீருக்கு லாட்டரி மூலம் 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. துபாய் டூட்டி ஃப்ரீ குலுக்கலில் முகமது பசீருக்கு அந்த பரிசுத்தொகை கிடைத்துள்ளது. கடந்த ரம்ஜானிற்காக தாய் நாடு செல்லும்போது இதற்கான பரிசுக்கூப்பனை பூர்த்தி செய்து துபாய் விமான நிலையத்தில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
திரும்பி வந்த பசீர் பெரிய விபத்திலிருந்து உயிர் தப்பியது மட்டுமல்லாமல் 1 மில்லியன் டாலரை பரிசாக பெற்று டபுள் அதிர்ஷ்டசாலி ஆகிவிட்டார். இது தொடர்பாக அவர் கூறும்போது " நான் துபாயில் கடந்த 37 வருடங்களாக பணி புரிந்து வருகிறேன். துபாய் நாட்டை என்னுடைய நாடு போலவே கருதி வருகிறேன். நான் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறேன். நான் ஓய்வு எடுக்க வேண்டிய தருணம் இது. விமான விபத்திலிருந்து என்னை பாதுகாத்த கடவுள் இரண்டாவது வாழ்வு தந்திருப்பதாகவே உணருகிறேன். இந்த பரிசுத்தொகையின் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்வேன். என்னால் இயன்ற அளவு வேலை செய்வேன். நாம் உழைத்து சம்பாதிக்கும் பணமே நமக்கு மன நிறைவைத்தரும்" இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments