கஷ்மீரில் 34வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தளபதி என கூறப்படும் புர்ஹான் வானி கொல்லப்பட்டத்தை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இராணுவத்தினர் கடந்த ஒரு மாதத்திற்குமேலாக வன்முறை சம்பவங்களை நடத்த பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் வன்முறையை தடுக்க பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதின் விளைவாக நூற்றுக்கணக்கானோர் தங்களது கண் பார்வையை இழந்துள்ளனர். இது மக்களவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் பெல்லட் குண்டுகளை தவிர்த்து குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் வேறு எந்த ஆயுதமும் தங்களிடத்தில் இல்லை என இராணுவ அதிகாரிகள் தெரிவித்திவிட்டனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
34வது நாளாக தொடரும் இந்த ஊரடங்கு உத்தரவால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்டெர்னெட், டெலிபோன் சேவைகளும் முடக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என உள்துறை அமைச்சர் ராஜனாத் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments