Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

யமுனை நதிக்கரையை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நாசப்படுத்தியதாக குற்றச்சாட்டு!


உலக கலாசார திருவிழா நடத்தி யமுனை நதிக்கரையை அடியோடு நாசப்படுத்திவிட்டது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு என்று தேசிய பசுமைத் தீர்பாயம் நியமித்த ஆய்வுக் குழு அதிரவைக்கும் குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு கடந்த மார்ச் மாதம் யமுனை நதிக்கரையில் உலகக் கலாசாரத் திருவிழா என்ற 3 நாட்கள் நிகழ்ச்சியை நடத்தியது.

இது யமுனை ஆற்றங்கரையை மாசுபடுத்தும் செயல் என அப்போதே கடும் எதிர்ப்பு எழுந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் இந்த திருவிழாவை மிகக் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் இந்த விழாவின் விளைவுகளை ஆராய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சசி சேகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது இந்தக் குழு நிகழ்ச்சி நடந்த இடத்தை ஆராய்ந்து அறிக்கை தந்துள்ளது. அந்த அறிக்கையில் யமுனைநதிக்கரையையே ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பினர் அடியோடு நாசப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

யமுனையின் மொத்த நதிக்கரையும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. சேதம் என்பது சிறிய அளவில் கிடையாது. நதிக்கரையின் தாவரங்கள், மரங்கள், செடிகள் என எல்லாமே அழிக்கப்பட்டவிட்டது. நதிக்கரை பகுதி முற்றிலுமாம சமமாக இறுக்கமாக உருமாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வாழும் கலை அமைப்பினர் ஏற்படுத்திய மொத்த சேதங்களை கணக்கிடவே முடியாது. அழிக்கப்பட்டுவிட்ட பெரும்பாலான தாவரங்களை மீட்கவும் முடியாது. இப்படி அந்த 47 பக்க அறிக்கை விவரிக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic