ஒட்டுமொத்த சென்னை மாநகரையுமே நிலைகுலையச் செய்யுமளவுக்கு கடந்த ஆண்டின் டிசம்பர் வெள்ளம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்தாலும் பொது மக்களாலும் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் பருவமழையை எதிர்கொண்டதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை பற்றிய அரசியல் மற்றும் உலகமயமாதல் காரணங்கள் பற்றி விவாதிக்கவும், இந்த வருடத்துக்கான பருவ மழையை எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் எதிர்கொள்வது பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘அறப்போர் இயக்கம்’ சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் ‘கொரட்டூர் குடியிருப்பாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பினுடைய தலைவர் பேசும்போது, “கொரட்டூர் பகுதி சென்னையிலேயே சிறப்பான முறையில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த இருபது வருடங்களாக குடியிருப்பாளர்கள் குப்பைக்கூளங்களை எல்லாம் கழிவுநீர் வடிகால்களில் போட்டு அவற்றுக்கு வழியே இல்லாமல் செய்து விடுகின்றனர். இதனால் வெள்ளத்தின்போது அவற்றுக்கு வடிகால்கள் ஏதும் இல்லாமல் நம் வீட்டுக்கே திரும்பி வருகின்றன” என்றார்.
மற்றொரு பிரச்னையைப் பற்றி பேசிய சித்தலப்பாக்கம் குடியிருப்பாளர்கள் சங்க உறுப்பினர், “வீடுகளின் அடிதளங்களுக்கும் ரோடுகளின் தரை மட்டத்துக்கும் இடையே உருவாகிக் கொண்டிருக்கும் உயர வேறுபாடு. ஒரு சில வீடுகளில் வீடுகளுக்குள்ளாகவே அவற்றுக்கான படிக்கட்டுகளை கட்டிகொள்ள வேண்டி இருக்கிறது. சாலைக்கும் வீடுகளுமான உயர வேறுபாடுதான் இதற்கு காரணம். ஒவ்வொரு முறை கார்ப்பரேஷனில் சாலை போடும்போதும் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் ரோடுகளைத் தகர்க்காமல் அதன் மேலேயே போட்டுவிட்டு போய் விடுகிறார்கள். இப்படியாக சாலையின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க வீடுகளின் மட்டம் குறைகிறது. இதனால் வெள்ளம் எளிதாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது” என்று கூறியவர், “அடுத்த முறை கார்ப்பரேஷனில் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை தடுக்க வேண்டியது நம் கடமை” என்றும் அவர் கூறினார்.
“அரசு தனது திட்டமிடலில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என போரூர், விரும்பாக்கம், ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். “சென்னையில் மற்ற பகுதிகளை விடவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட பகுதி வேளச்சேரி தான். ஆற்றங்கரையின் சுற்றுப்புறத்தில் உருவான அப்பகுதி, முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால், அரசாங்கம் இன்றுவரை அதற்கான வடிகால் ஏற்பாடுகளை முறையான வழிகளில் செய்து முடிக்காமல் இருக்கிறது. மீண்டும் வெள்ளம் வந்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். இதே போல தாம்பரம் பகுதியும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. படகுகள்கூட உள்ளே வந்து போக முடியாத அளவுக்கு போக்குவரத்து தடைபட்டிருந்தது. அதன் பிறகு ஒன்பது மாதங்கள் ஆகியும் சரியான மீட்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
இன்னொரு மாணவர் பேசும்போது, “இதுபோன்ற பேரிடர்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஏனெனில் வெள்ளம் வந்த சமயத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளை காப்பாற்றுவதில் பல்வேறு சிரமங்களைச்சந்தித்தனர்” என்று கூறினார்.
இதில் கலந்து கொண்ட அனைத்து சங்கங்களைச் சேர்ந்தவர்களும் தங்களை இணைத்ததற்காகவும், தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களை செய்து வருவதற்காகவும் ஒட்டுமொத்தமாக அறப்போர் இயக்கத்துக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்து கொண்டனர்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சந்திரமோகன், “மக்கள் அனைவரும் ஒன்றுகூடி முழு மனதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்” என உறுதிமொழி எடுக்க சொல்லி, சபையை நிறைவு செய்தார்.

No comments:
Write comments