Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

செய்யக்கூடாது காரியத்தை செஞ்சு மந்திரிப்பதவியை இழந்த ஆம் ஆத்மி அமைச்சர்!




பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற  வீடியோ வெளியானதை தொடர்ந்து டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரின் பதவியை பறித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சமூக நலம்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார். இவரை தனது அமைச்சரவையில் இருந்து இன்று அதிரடியாக நீக்கிஉத்தரவிட்டார் முதல்வர் கெஜ்ரிவால்.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், நேற்று அமைச்சர் சந்தீப்குமார் தொடர்பான சி.டி. முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது.. அதில் இரண்டு பெண்களுடன் ஏடாகூடமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி அமைச்சரின் ஏடாகூட வீடியோ புகார் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

36 வயதாகும் சந்தீப் குமார், சமூக ஆர்வலராக இவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து டெல்லி சுல்தான்பூர் மஜ்ரியா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic