Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கி துவங்கப்படவிருக்கிறது...?


இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வக்கி தொடங்குவது பற்றி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆராய்ந்து வருகிறது.

வட்டிக்கு வாங்குவதும், கொடுப்பதும் பாவச்செயல் என்று இஸ்லாம் மதம் கூறுகிறது. இதற்கு மதிப்பளித்து இவர்களுக்கான வட்டியில்லா வங்கி தொடங்கப்படுவடவேண்டியது குறித்து  ரிசர்வ் வங்கி தனது 2015-2016 ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜித்தாவை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவில் தனது  முதல் வங்கி கிளையை அகமதபாத்தில் தொடங்குவதாக அறிவித்தது. இதற்கு சில அரசியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் உலக அளவில் இஸ்லாமிய வங்கி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுஜ்ராம் ராஜன் 2008ஆம் ஆண்டு இறுதியில் நிதித்துறை சீர்திருத்த குழு தலைவராக இருந்த போது, வட்டியில்லா வங்கி தொடங்குவது பற்றி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இ ந் நிலையில் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கி (சரீயத் வங்கி) தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தற்போது ஆராய்ந்து வருகின்றன. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி இயக்குனர் தீபக் மொஹந்தி நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள், வட்டியில்லா வங்கிச்சேவை வழங்க முன்வரவேண்டும் என பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ஆம் ஆண்டு 36 நாடுகளில் இயங்கிய இஸ்லாமிய வங்கிகள் தற்போது 70 நாடுகளுக்குமேல் விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்தியாவில் வட்டியில்லா வங்கியை துவங்குவதற்கு ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சாமி எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். ரகுராம் ராஜன் மீதான் சுப்பிரமணியசுவாமியின் கருத்துக்கு இவ்விசயமும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic