Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 12, 2016

பாக் ஆக்கிரமிப்பு கஷ்மீரும் இந்தியாவோடதே - மோடி


பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட கஷ்மீர் பகுதியும் இந்தியாவோடதே என அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரதம பேசும்போது " நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை விசயத்தில் எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது அதே சமயம் கஷ்மீர் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

கஷ்மீர் விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றாக குரல் கொடுப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக தான் அனைத்து கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். அதே சமயம் கஷ்மீரில் பிரச்சனை எல்லை மீறி சென்றதற்கான முக்கிய காரணம் பாகிஸ்தானின் தூண்டுதலினால் தான் என்பதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானால் ஆக்கிமிக்கப்பட்ட கஷ்மீர் பகுதியும் இந்தியாவோடதே என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் ஹெட்சூரி கூறும்போது " எங்கள் தரப்பிலிருந்து அனைத்துவிதமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம். உள்துறை அமைச்சர் அவை அனைத்தையும் கருத்தில் எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என தெரிவித்தார்.

கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. ஒரு மாதத்திற்குமேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்ட வந்த போதிலும் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையிலேயே அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதற்கட்டமாக பெல்லட் குண்டுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகள் எடுத்துவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic