Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 12, 2016

துறவறம் மேற்கொள்வது தனிப்பட்ட விருப்பம் - உயர் நீதிமன்றம்


துறவறமா? இல்லறமா? என்ற விஷயத்தில் யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. அது அவரவர் விருப்பம் என சென்னை உயர் நீதிமன்றம் ஈஷா யோகா மையம் விவகாரத்தில் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச்சேர்ந்த காமரஜா சத்தியவதி தம்பதியின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களின் மகள்களான கீதா, லதா ஆகிய இருவரும் கோவை ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை மீட்டு தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து கோவை மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்ற விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி 9 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, 18 வயது நிரம்பியவர்களாக இருந்தால் சன்னியாசம், குடும்ப வாழ்க்கை தொடர்பாக யாரும், யாரையும் நிர்பந்திக்க முடியாது. துறவறம் சிறந்ததா? அல்லது இல்லறம் சிறந்ததா என்று பட்டிமன்றம் நடத்த முடியாது. இங்கு இருக்கும் இருவரும் அவர்கள் விருப்பத்தின் பேரிலே தங்கி இருக்கின்றனர். பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் , அதே நேரத்தில் இல்லறத்திற்கு திரும்புமாறு கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு செயல்பட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.

ஈஷா மையத்தின் மீது வேறு ஏதும் புகார் இருந்தால் அதனை தனியாக மனுவாக தாக்கல் செய்யலாம். இவ்வறு நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர். ஈஷா மையத்தில் அதிகாரிகளின் விசாரணை அறிக்கையில் லதா, கீதா இருவரும் அவர்களின் முழு விருப்பப்படியே அங்கு தங்கி இருப்பதாக கூறியிருந்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic