Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 3, 2016

தஞ்சாவூரில் இளம்பெண் கற்பழிப்பு



தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் ஆதிக்க சாதியினரால் ஆண்டுக்கு 15 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கலைச்செல்வி என்ற இளம்பெண் நிர்வாணமாக கொலைசெய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலைச்செல்வியின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலையை செய்த ராஜா மற்றும் குமார் என்ற இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்வதிலும் காவல்துறை மெத்தனம் காட்டியுள்ளனர். மதுரை எவிடென்ஸ் அமைப்பினர் தலையிட்ட பின்னரே அவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஊரில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கும் தலித் சமூகத்து பெண்களை, அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சிலர் இது போன்ற பாலியல் கொடுமைகள் செய்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. வருடத்திற்கு 15 பெண்களாவது இது போன்று பாதிக்கப்படுகிறார்கள்.

தங்களை காப்பாற்றும்படி அந்த ஊர் தலித் மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம் என கதறி அழுகிறார் கலைச்செல்வியின் தந்தை ராஜேந்திரன்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic