Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 3, 2016

தலித்கள் தாக்கப்படுவதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இரயில் மறியல்


குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசு வதை செய்யபடுவதாக குற்றஞ்சாட்டி தலித் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுவருவதை கண்டித்து நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்து வருகின்றது.தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி இதனையும், கஷ்மீர் மக்கள் மீது இந்தியா ராணுவம் தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதளையும் கண்டித்தும்,காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் (AFSPA) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் இரயில் மறியலில் ஈடுபட்டனர்.ரயில் நிலையத்திற்குள் அக்கட்சியினர் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் போலீசாருக்கும் அக்கட்சியினருக்கும் இடையே சிறிது தள்ளு முள்ளு நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் காவல்துறையால் கைது செய்யபட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic