நாட்டின் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் விளைவாக பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற குற்றத்திற்காக முகமது அக்லாக் என்ற முதியவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நிகழ்ந்தது உத்திரபிரதேச மாநிலம் என்றும், அம்மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது என பா.ஜ.க அகிலேஷ் யாதவ் அரசை ஒரு பக்கம் குற்றஞ்சாட்டியது அதே சமயம் மறு பக்கம் மாட்டை கொல்பவர்களுக்கு இது தான் சரியான தண்டனை எனவும், மாட்டை கொன்ற அக்லாக் குடும்பத்திற்கு அகிலேஷ் அரசு துணையாக நிற்கிறது என பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம் தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் பூதகரமாக ஆன நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தரப்பிலிருந்து எந்த கண்டனமும் இதற்கு தெரிவிக்கப்படவில்லை.
தற்போது கடந்த மாதம் குஜராத்தில் உனா மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக சில தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அரசுக்கு எதிராக தலித் மக்கள் மாபெரும் போராட்டங்களை நடத்த துவங்கினர். இதே போன்று மற்றொரு சம்பவமும் பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் இரண்டு முஸ்லிம் பெண்கள் மாட்டிறைச்சி வைத்திருந்தனர் என்ற குற்றத்திற்காக ஒரு கும்பல் கடுமையாக அவர்களை தாக்கியது. குஜராத்தில் நடைபெற்ற தலித்கல் சம்பவம் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போதே மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இச்சம்பவம் மாநிலங்களவையில் கடும் பிரச்சனையாக ஆக்கப்பட்டது. குஜராத்தில் ஏற்பட்ட போராட்டத்தின் விளைவு அம்மாநில முதலமைச்சர் ஆனந்திபென் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவ்வளவு தூரம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தும் இது தொடர்பாக மவுனம் காத்து வந்த பிரதமர் மோடி நேற்று முதன் முறையாக இந்த தாக்குதலை கண்டித்து தெலுங்கானாவைல் உரையாற்றினார். 'என்னுடைய சகோதரர்களான தலித்களை தாக்காதீர்கள், வேண்டுமானால் என்னை தாக்குங்கள்' என உணர்ச்சிவசப்பட்டு பேசினார். பசு காவலர்கள் என தங்களை சொல்லிக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் குற்றப்பின்னனி கொண்டவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் எனவும் அவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆனால் பிரதமர் மோடி கூறியது காலம் கடந்த ஞான உதயம் எனவும், தனது கட்சிக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்ற காரணத்திற்காகவே பிரதமர் இத்தாக்குதல்களை கண்டித்துள்ளார் என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். வெறும் பேச்சளவில் இல்லாமல் மோடி தான் சொன்னதை செயல்படுத்த வேண்டுமெனவும் அவர்கள் கூறினர்.
ஒன்றை நாம் இங்கே கவனிக்க வேண்டும். பசு காவலர்கள் என தங்களை சொல்லிக்கொண்டு தாக்குதல் நடத்துகிறவர்கள் அனைவருமே பா.ஜ.கவையோ அல்லது இன்ன பிற சங்கப்பரிவார அமைப்புகளின் பின்னனியிலேயே செயல்படுகிறவர்கள். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொடுத்துவரும் மறைமுக ஆதரவின் தைரியத்தினாலேயே இதுபோன்ற தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மற்றொரு பிரிவான் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் குஜராத் நிர்வாகம் மோடியின் இந்த பேச்சை கடுமையாக கண்டித்துள்ளது. பசுவை கொல்பவர்களுக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் இந்துத்துவா பாதையிலிருந்து மாறிவிட்டார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆகையால் மோடி தெலுங்கானா கூட்டத்தில் பேசிய பேச்சு வெற்றும் வெத்துப்பேச்சு எனவும், அவரது வேண்டுகோளை சங்கப்பரிவார அமைப்புகளும், பசு காவல்ர்ககள் அமைப்புகளும் கேட்க தயாராக இல்லை என்பது மட்டுமே நிதர்சனம்.

No comments:
Write comments