Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 30, 2016

புதிய கட்சி துவங்குகிறாரா ராஜபக்சே...?




இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். 

கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.  இதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கட்சித் தலைவர் பதவியையும் ராஜபக்சே ராஜினாமா செய்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஏற்றுக் கொண்டார்.

தற்போது ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் கட்சியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ளனர். எனவே புதிதாக கட்சியைத் தொடங்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் குழு இலங்கை சுதந்திர கட்சிக்கு இணையான பெயர் ஒன்றை தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது. விரைவில் ராஜபக்சே தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது.

அதே சமயம் அரசுக்கு எதிராக புதிய கட்சியை துவங்கினால் கடும் விளைவுகளை ராஜபக்சே சந்திக்க நேரிடும் என முன்னதாக இலங்கை அதிபர் ஸ்ரீசேனா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic