Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை - கீதா & லதா


ஈஷா யோகா மையத்திலேயே எங்களின் விருப்பப்படி வாழவிடுங்கள். எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என காமராஜ் சத்தியவதி தம்பதியினரின் இருமகள்கள் கீதா, லதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஈஷா யோகா மையத்தின் சாமியார் ஜக்கி வாசுதேவ் தங்களது இரு பெண் பிள்ளைகளையும் மூளை சலவை செய்து சன்னியாசிகளாக மாற்றிவிட்டார் என குற்றஞ்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கோவை நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவ்விரு சகோதரிகளை விசாரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் பூட்டப்பட்ட அறையில் அவ்விருவரும் விசாரிக்கப்பட்டார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கீதா-லதா ஆகியோர் கூறியதாவது " எங்கள் விருப்பத்தின் பெயரிலேயே நாங்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கிறோம். நாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழந்து வருகிறோம். கடந்த ஜூலை 19ஆம் தேதிவரை எங்களுடைய பெற்றோர் எங்களுடன் தங்கியிருந்தனர். ஆனால் அதற்குபிறகு அவர்களை யாரோ தூண்டிவிட்டிருக்கின்றனர். சன்னியாசியாக மாற எங்களை யாரும் வற்புறுத்தவில்லை. எங்களின் விருப்பபடியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பெற்றோர்கள் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எங்கள் பெற்றோர்களுக்கு எங்கள் மீது பாசமில்லை. அப்படி இருந்திருந்தால் எங்களை இவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தியிருக்கமாட்டார்கள்" என தெரிவித்துள்ளனர்.

இரு சகோதிரிகளும் மேஜர் என்பதாலும் அவர்கள் இருவரும் தங்கள் விருப்பபடியே சன்னியாசம் பெற்றதாக கூறுவதினால் இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic