Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை - டிரம்பை எச்சரித்த ஹிலாரி



அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடியவிருப்பதையொட்டு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடக்கவிருக்கிறது. குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். டொனால்ட் டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருவதால் அவரது கட்சியினரே அவர்மீது அதிருப்தி கொண்டுள்ளனர். இதனால் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹிலாரி கிளிண்டன் பேசும்போது "அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது. பள்ளி மாணவர்கள் கூட பல சமயங்களில் துப்பாக்கி வைத்துக்கொண்டு திறிகிறார்கள். நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் துப்பாக்கி கலாச்சாரத்தை முற்றிலுமாக தடுத்து, அதற்கான உரிமையை ரத்து செய்வேன்" என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய டொனால் டிரம்ப் "துப்பாக்கி வைத்திருப்பவர்களின் உரிமம் ரத்துசெய்யப்பட்டுவிட்டால் தனி நபருடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். துப்பாக்கி வைத்திருப்பவர்கள் நினைத்தால் அதிபர் தேர்தலி ஹிலாரியின் வெற்றியை தடுக்க முடியும்" என இரட்டை அர்தத்தில் பேசினார். இது கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. சக வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் பேச்சாக இது கருதப்படுகிறது. டிரம்பின் இந்த பேச்சுக்கு அக்கட்சியைச்சேர்ந்தவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் இந்த பேச்சுக்கு ஹிலாரி எச்சரிக்கை விடுத்துள்ளார், " நண்பர்களே! வார்த்தைகள் முக்கியமானவை. அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும்போதோ அல்லது அதிபர் ஆகிவிட்டாலோ உங்களுடைய தவறான வார்த்தைகள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே பேசும்போது என்ன பேசுகிறோம் என உணர்ந்து கொண்டு கருத்தை தெரிவியுங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic