Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்...!


கஷ்மீருக்கு இந்தியாவிடமிருந்து விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் அடுத்த தளபதி தெரிவித்துள்ளான்.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்கான் வாணி கொல்லப்பட்டான். அதனை தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இவ்வன்முறையின் காரணமாக இது வரை 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கஷ்மீரில் ஹிந்துஸ்தான் பத்திரிகை அலுவலகத்திற்கு ஒரு வீடியோ வந்துள்ளது. அதில் புர்கான் வாணிக்கும் பிறகு அந்த இடத்தை தான் பொறுப்பேற்றிருப்பதாகவும், கஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து சுதந்திர கிடைக்கும் வரை போராடுவார்கள் என கூறுவதாக இருக்கிறது. அதில் தனது பெயர் ஜாகிர் ராஷித் பட் என தெரிவித்துள்ளான். தற்போது இவ்வீடியோ வாட்ஸ்அப் மூலமாகவும் பரவி வருகிறது.

அவ்வீடியோவில் அவன் மேலும் கூறியிருப்பதாவது "கடையடைப்புக்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெறும். போராட்டத்தை நிறுத்த வேண்டும் என யாராவது வேண்டினால் அவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. நமக்கு இந்தியாவிடமிருந்து சுதந்திரம் கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருக்கவேண்டும். நாம் அல்லாவை மட்டுமே பின்பற்ற வேண்டுன். நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்" என தெரிவித்துள்ளான்.

"வதந்திகளை கஷ்மீர் மக்கள் யாரும் நம்பவேண்டாம். சிறப்பு காவல்துறையினரை எதிர்ப்பதற்காக அதிக இளைஞர்களை திரட்ட வேண்டும். நாம் ஒவ்வொருவருக்குள் சண்டையிட்டு கொண்டிருக்க கூடாது. இன்று தீவிரவாதிகளாக சித்திரிக்கப்படுபவர்கள் அனைவருமே இந்திய இராணுவத்தினரால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்களே. நாங்கள் துப்பாக்கியை ஏந்துவதற்கு காரணமே இந்தியா தான்" என ராஷித் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளான்.

எனினும் இந்தியாவில் சில நல்ல மனம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். கஷ்மீர் மக்கள் இந்திய இராணுவத்தினரால் எந்த அளவிற்கு துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என ராஷித் தெரிவித்துள்ளான்.

ராஷித் ஒரு பொறியியல் மாணவனாக இருந்தான் எனவும், சண்டிகர் மாநிலத்தில் கடந்த 2013ஆம் ஆண்டுதான் தனது கல்லூரி படிப்பை முடித்திருக்கிறான். கல்லூரியை முடித்து விட்டு தனது சொந்த கிராமமான நூர்புராவிற்கு சென்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்திருக்கிறான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic