Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

டொனால்ட் டிரம்ப் அபாயகரமான அதிபராக மாறக்கூடும்...!


அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் தேர்தலில் வெற்றி பெற்றால், அபாயகரமான அதிபராக‌ இருப்பார் என தேசிய பாதுகாப்பு, வெளியுறவு வல்லுனர்கள் 50 பேர் அதிரடி அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பெரும் பிரபரல‌ தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் வேலையில் சொந்தக் கட்சியிலேயே டிரம்பிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குடியரசு கட்சியை சேர்ந்த தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் 50 பேர் கையெழுத்திட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது, "நாங்கள் யாரும் டிரம்பிற்கு ஆதரவாக வாக்களிக்க‌ மாட்டோம்.வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் பார்த்தால் டிரம்பிற்கு அதிபர் ஆவதற்கோ, படைத்தலைவராக ஆவதற்கோ எந்த தகுதியும் இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றால் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அபாயகரமான அதிபராக‌ இருப்பார். அவர் நாட்டின் பாதுகாப்பிற்கும், நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவார் என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அடிப்படையில் டிரம்ப் அதிபர் ஆவதற்கேற்ற நடத்தையில், மதிப்பீட்டில், அனுபவத்தில் பின்தங்கி உள்ளார். அவர் சுதந்திரமான உலகின் தலைவர் என்ற வகையில், அமெரிக்காவின் தார்மீக அதிகாரத்தில் பலவீனமாக உள்ளார்." என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அரசியல் சாசனம், சட்டங்கள், அமெரிக்க நிறுவனங்கள், மத சகிப்புத்தன்மை, பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான நீதி அமைப்பு ஆகியவறை பற்றிய அடிப்படை அறிவோ, நம்பிக்கையோ இல்லாதவராக அவர் இருப்பதாகவே தோன்றுகிறது. அதிபர் ஆவதற்கு வேண்டிய குணமும் அவரிடத்தில் இல்லை. அவர் தனக்கு அமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களில், சிக்கலான ராஜதந்திர சவால்களில், தவிர்க்க முடியாத கூட்டணிகளில், வெளியுறவு கொள்கை சார்ந்த ஜனநாயக மதிப்பீடுகளில் மிகச்சிறிய அளவிலான புரிதல் இருப்பதாகத்தான் மீண்டும் மீண்டும் காட்டிக்கொள்கிறார். அவர் உண்மையையும், பொய்யையும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை அல்லது அவரால் அது முடியவில்லை. அவர் மாறுபட்ட கருத்துகளை ஊக்குவிப்பதில்லை. அவரிடம் சுய கட்டுப்பாடும் இல்லை. மூர்க்கத்தனமாக செயல்படுகிறார். தனிப்பட்ட விமர்சனங்களை அவர் தாங்கிக்கொள்வதில்லை. அவர் தனது நிலையற்ற நடத்தையால், நெருக்கமான கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். இவையெல்லாம் அமெரிக்க அதிபர், படைத்தலைவர் ஆக விரும்புகிற ஒரு தனிநபரின் அபாயகரமான குணங்களாகும்" என மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் ரிச்சர்டு நிக்சன் தொடங்கி ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரையிலான அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் பணியாற்றிய வல்லுனர்கள்தான் கையெழுத்திட்டிருக்கிறார்கள். கையெழுத்திட்டவர்களில் சி.ஐ.ஏ. முன்னாள் டைரக்டர்கள் மைக்கேல் மாரல், மைக்கேல் ஹெய்டன், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கார்லா ஹில்ஸ், இந்தியாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.  ஆனால் இந்த அறிக்கையை டொனால்டு டிரம்ப் நிராகரித்து விட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic