இங்கிலாந்தில் ஒளிந்திருக்கும் பயங்கரவாத் டைகர் கனீப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசு மறுத்துவருகிறது.
இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டைகர் கனீப் என்ற பயங்கரவாதி இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச்சென்று தஞ்சம் அடைந்துள்ளான். இதனை அறிந்த இந்திய அரசு அவனை இந்தியா வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. இதற்கு தன்னால் எதுவும் செய்ய இயலாது எனவும் வேண்டுமானால் நீதிமன்றம் வாயிலாக முயற்சி செய்யுங்கள் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஒளிந்திருக்கும் டைகர் கனீப்பை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளதை இந்திய அரசு வன்மையாக கண்டித்திருக்கிறது. ஒரு பயங்கரவாதிக்கும் இங்கிலாந்து அரசு தஞ்சம் கொடுத்துள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது. தற்போது இந்த செய்தி இங்கிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரதமர் தெரசா மே கடும் அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய யூனியன் கூட்டத்திலிருந்து இங்கிலாந்து அரசு வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா மே முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கிடையே நல்லுறவு இருந்துவந்தாலும் இந்தியாவில் குற்றம் இழைத்துவிட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தவர்களை திரும்ப ஒப்படைக்கும் விஷயத்தில் இரு நாடுகளுக்கிடையே கருத்து முரண்பாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments