Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 1, 2016

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது...!!!


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.42 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.01 காசுகளையும் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 42 டாலர் (சுமார் ரூ.2,800) அளவுக்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை சரிவு மற்றும் ரூபாய்–அமெரிக்க டாலர் சந்தை விலை வாரண்ட் குறைவு ஆகியவற்றின் பலன், பொதுமக்களை சென்றடைகிற வகையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச எண்ணெய் சந்தையும், ரூபாய்–அமெரிக்க டாலர் சந்தையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும். அதற்கு ஏற்ற வகையில், எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை பிரதிபலிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 3–வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. கடந்த ஜூலை மாதம் 1–ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலை 49 பைசாவும் குறைக்கப்பட்டது. இதேபோல், கடந்த ஜூலை மாதம் 16–ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசல் விலை 42 பைசாவும் குறைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 3–வது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42–ம், டீசல் விலை ரூ.2.01–ம் நேற்று குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பினால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62–ல் இருந்து ரூ.60.58 ஆக குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.55.82–ல் இருந்து ரூ.53.81 ஆக குறைந்திருக்கிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.62.51–ல் இருந்து ரூ.61.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.54.28–ல் இருந்து ரூ.52.27 ஆகவும் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic