காஷ்மீரில் வன்முறையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிப்பதால் 23-வது நாளாக தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீர் மாவட்டம் அனந்த்நாக் பகுதியில் போராளிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் பல அப்பாவி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதனையடுத்து கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகின்றன. கலவரங்களை கட்டுக்குள் வைக்க பாதுகாப்பு படையினர் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாதுகாப்பு படையினரை உடனடியாக கைது செய்ய போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இளைஞரின் உயிரிழப்பையடுத்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. வன்முறை காரணமாக காஷ்மீரின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் தொடர்ந்து 23-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வன்முறையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு கண்களின் பார்வை பறிபோயுள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய தடைசெய்யப்பட்ட பெல்லெட் குண்டு துப்பாக்கிசூட்டில் தான் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. இது மற்ற மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
இது தொடர்பாக நாட்டின் பிரதமர் வாய்மூடி மௌனமான இருப்பது மிகவும் கவலையளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments