Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

முடி உதிர்வதைத் தடுக்க வழி!


பொதுவாக பொடுகு, ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களால் முடி உதிரும். டைபாய்டு, மலேரியா போன்ற நீண்டநாள் வாட்டும் காய்ச்சல் வந்தால்கூட முடி உதிரும். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும். பலருக்கு மன உளைச்சல் காரணமாகத்தான் முடி உதிர்கிறது. மனப்பிரச்னைகள் இல்லாமல் இருந்தாலே, இதைத் தவிர்க்கலாம். அதேபோல புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதாலும், மது அருந்துவதாலும்கூட முடி உதிர்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முடி உதிர்வைத் தவிர்ப்பது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. ‘முடி உதிர்வதைத் தடுக்க இரும்புச் சத்து, கால்சியம், புரதச் சத்து நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துக்கொண்டால் போதும். சமச்சீரான உணவு முடி உதிர்வையும் தடுக்கும். இளநரை ஏற்படாமலும் தடுக்கலாம்’ என்கிறார் சரும மற்றும் ரோம நோய் நிபுணர் டாக்டர் முருகுசுந்தரம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic