டெல்லியில்
ஆண்டொன்றுக்கு மது விற்பனையால் ரூ.3150 கோடி வருமானம் வருகிறது. இந்த
வருமானம் கடந்த ஆண்டு வருமானத்தைவிட பத்து சதவிகிதம் அதிகம். இந்நிலையில்
மது விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது இடங்களில் மதுக்கடைகளைத்
திறக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
பீகாரில் மதுவிலக்கை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அமல்படுத்தியுள்ளார். மேலும் மதுவிலக்கை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளுக்கும் அங்கே வழங்கப்படுகிறது. இது மற்ற மாநில முதல்வர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் டெல்லி அரசின் கலால் வரிக்கொள்கை 2016இல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் டெல்லியில் மது விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரியவந்துள்ளது. மேலும், பொது இடங்களில் புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கெஜ்ரிவால் வெளியிட்ட அறிவிப்பில், “டெல்லியில் பொது இடங்களில் உள்ள மதுக்கடைகள் மீது இந்த ஆண்டு அதிக புகார்கள் வந்துள்ளன. இனி, இதுபோன்ற புகார்கள் மீது கடைகளின் அருகிலுள்ள தெருக்களின் சபை கூடி, மதுக்கடையை இடமாற்றம் செய்வது அல்லது நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு எடுக்கும். பொது இடங்களில் குடித்து விட்டு சிலர் பெண்களை இழிவுபடுத்தும் போக்கால் அரசுக்கு இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அரசு அதிகாரிகள், “பொது இடங்களில் உள்ள மதுக்கடைகள் மீது அவற்றின் அருகில் வசிக்கும் 10 சதவிகித வாக்காளர்கள் அளிக்கும் புகார்கள் தெருக்கள் சபை முன் வைக்கப்படும். இதில் குறைந்தபட்சம் 15 சதவிகித வாக்காளர்கள் கலந்து கொண்டு, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் எடுக்கும் முடிவுகளின்படி அந்த மதுக்கடைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அதேசமயம், பெண் உரிமையை மதிக்கும் பொருட்டு இந்தக் கூட்டங்களில் 33 சதவிகித பெண்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
டெல்லி அரசின் இந்த புதிய முடிவால், பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களே பொறுப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் மது விநியோகிக்கும் பணியை டெல்லி மாநில சுற்றுலா வளர்ச்சி நிறுவனம், டெல்லி மாநில பொது விநியோக நிறுவனம், டெல்லி மாநில தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் மற்றும் டெல்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனம் ஆகியவை செய்து வருகின்றன.
இவற்றின் சார்பில் 356 உள்நாட்டு மதுபானக் கடைகள், 104 சாராயக் கடைகள், 90 தனியார் மதுபான மற்றும் சாராயக் கடைகள் உள்ளன. இவை தவிர டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால்களிலும் சிறிய அளவிலான பல கடைகள் அமைந்துள்ளன. ‘மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வருவதன் முன்னோட்டமே கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

No comments:
Write comments