மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா நகரில், சுதந்திர போராட்டத்தின்போது உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் , நமது சுதந்திர போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்காக தலை வணங்குவோம். நாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பண்டிட் நேரு, பகத்சிங், ராஜ்குரு போன்ற தைரியம் மிக்க தலைவர்களைக் கொண்டிருந்தோம். அவர்கள் அனைவரும் தூக்கில் போடப்பட்டனர் என்றார்.
நேதாஜி, நேருவை தூக்கிலிடப்பட்ட தலைவர்கள் வரிசையில் பிரகாஷ் ஜவடேகர் இணைத்து பேசிய வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் அவருக்கு நினைவாற்றல் தவறி விட்டது என்றும் விமர்சித்தனர்.இதற்கு டுவிட்டரில் தனது விளக்கத்தை பதிவு செய்த பிரகாஷ் ஜவடேகர், ''இதில் யாரும் குழப்பம் அடையவேண்டாம். காந்தி, நேரு, நேதாஜி ஆகிய தலைவர்களை பற்றி நான் குறிப்பிட்ட இடத்தில் முற்றுப்புள்ளி உள்ளது. அடுத்த வரியில் சுதந்திரபோரின்போது தூக்கில் போடப்பட்ட, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்டனர் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன்'' என்று விளக்கம் அளித்தார்.

No comments:
Write comments