இந்தியாவை நீங்கள் தாய்நாடாக கருதுவது உண்மையானால் நீங்கள் பசுவை தாயாக மதிக்க வேண்டுமென ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கூறியுள்ளார்.
பசு பாதுகாப்பு, தலித்கள் மீதான தாக்குதல் என்ற சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில், ஜார்கண்ட் முதலமைச்சரின் இக்கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பி.டி.ஐ செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தியாவை தாயாக கருதுவது உண்மையானால் பசுவை உங்களது தாயாக மதிக்க வேன்டும். பசு பாதுகாப்பு விவகாரத்தில் சங்கப்பரிவார அமைப்புக்களுக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே வேளையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
நமது பிரதமர் இப்பிரச்சனையில் தனது சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். கால் நடைகள் கடத்தலில் ஈடுபடுபவர்களே பசு பாதுகாப்பு என்ற போர்வையில் தாக்குதல் மற்றும் படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என்பது எனது கருத்தும். இந்தக்கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் சில சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. அரசியல் கட்சிகள் எல்லாப் பிரச்சினைகளிலும் வாக்கு லாபம் தேடக்கூடாது. பசும்பால் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் பயன்படுகிறது.
பலாத்காரங்களாக இருக்கட்டும், பசுவதையாக இருக்கட்டும் இல்லை வேறு எந்த சமூக விரோதச் செயலாகவும் இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் காரணம் ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும் பழக்கம் குறைந்து வருவதே. எனவே நல்லொழுக்கம் கற்பித்தல் அவசியம். பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்காங்கே நடக்கும் வன்முறைகள் பிரதமரின் தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான சதி" என்றார்.

No comments:
Write comments