மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரண்டாவது முறையாக 2 நாள் பயணமாக இன்று கஷ்மீர் வந்தார். இந்நிலையில் ஜம்மு-கஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.
கஷ்மீரில் கடந்த மாதம் 8–ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்கு கடந்த 46 நாட்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. 2 போலீஸ்காரர்கள் உள்பட 65–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை கஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா தலைமையில் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது கஷ்மீர் நிலவரம் குறித்து அவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலையும், வேதனையும் தெரிவித்தார். கஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது அங்கு நிலைமை கொஞ்சம் மாறி வருவதால், ஸ்ரீநகர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் 5 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று கஷ்மீர் சென்றார். இந்த மாதத்தில் கஷ்மீருக்கு அவர் செல்வது இது இரண்டாவது முறை ஆகும். ஸ்ரீநகரில் நேரு விருந்தினர் இல்லத்தில் ஜம்மு-கஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ராஜ்நாத் சிங்குடன் கஷ்மீர் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து உமர் அப்துல்லா விவாதித்தார்.
2 நாள் பயணமாக ஜம்மு கஷ்மீர் வந்துள்ள ராஜ்நாத் சிங் கஷ்மீர் பள்ளத்தாக்கில் கள நிலவரம் எப்படி உள்ளது என்பதை தனது பயணத்தின்போது ஆய்வு செய்ய உள்ளார். மேலும், பல்வேறு தரப்பினருடனும் அவர் பேச்சு வார்த்தையும் நடத்த உள்ளார்.

No comments:
Write comments