Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 24, 2016

கஷ்மீர் வன்முறையால் இதுவரை 6 ஆயிரம் கோடி நஷ்டம்




கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் புர்கான் வானி  கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட தொடர் வன்முறையால் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். க‌ஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால் கடந்த 46 நாட்களாக ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. இன்னமும் சகஜநிலை திரும்பாததால் பொதுமக்கள் மட்டுமின்றி, வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து க‌ஷ்மீர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முகமது யாசின்கான் கூறியதாவது,

க‌ஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 46 நாட்களில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு  ரூ.135 கோடி என சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் வன்முறை சம்பவங்களால் வியாபாரிகள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து விட்டதால் ஓட்டல்கள், படகு இல்லங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. நகர் உள்ளிட்ட பகுதிகளில் தரை விரிப்புகள், சால்வைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன.

இந்தியாவில் சுமார் 70 சதவீத ஆப்பிள் பழங்கள் காஷ்மீரில் இருந்துதான் விற்பனைக்கு செல்கின்றன. சோபூர், தர்சூ, அனந்த்நாக் ஆகிய பகுதிகளில் ஆப்பிள்கள் விற்பனை மந்தமாக இருப்பதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனர். இதேபோல், தொழிற்சாலைகளும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையுள்ளது. எனவே, காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இவ்வாறு முகமது யாசின்கான் தெரிவித்தார். 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic