ஒரு மனிதனுக்கு செல்வ செழிப்புடன் காரு, பங்களா, மது, மாது என வாழ்ந்து வந்தால், அவனைப்பார்த்து மச்சக்காரன் என்று சொல்வார்கள். இந்த வாக்கியத்திற்கு யாரு பொறுந்துகிறாரோ இல்லையோ, விஜய் மல்லையா நன்றாகவே பொருந்திப்போகிறார். ச்சே! மனுஷன் என்னாம்மா வாழ்ந்திருக்கான்யா! என அனைவரது புருவமும் உயரும் அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் மல்லையா. ஆனால் என்ன ஒரே ஒரு வித்யாசம் என்றால், மல்லையா வாழ்ந்தது அடுத்தவனோட காசை வைத்து என்பதே!
9000 கோடி கடன் வாங்கிவிட்டு "பிம்பிளிக்கி பியாபி" என இங்கிலாந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர படாதபாடு பட்டு வருகின்றனர். ஆனால் நமக்கு தெரிஞ்ச சட்டவரம்பை வைத்து பார்க்கும்போது இங்கிலாந்து தப்பிச்சென்ற மல்லையா அவரா விரும்பி வந்தால் தான் உண்டு என்பதே தெளிவாக தெரிகிறது. மல்லையாவிடம் பறிகொடுத்த பணத்தை எப்படியாவது தேர்த்துவிடவேண்டுமென்பதற்காக கடன் கொடுத்த வங்கிகள் மல்லையாவின் ஜட்டி முதற்கொண்டு விமானம் வரை அனைத்தையும் ஒவ்வொன்றாக கையகப்படுத்தி வருகிறது.

தற்போது கோவாவில் அவரது ஆடம்பர வில்லாவும் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. கோவாவிற்கு சுற்றுழா வருபவர்கள் தற்போது மல்லையாவின் வில்லாவையும் சுற்றுழா தளமாக கருதி வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கூடிய விரைவில் இந்த ஆடம்பர வில்லா ஏலத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே நுழைந்து பார்த்தால் அசந்தே போய்விடுவோம். அம்மாடியோவ்! என்னமாதிரியான ஆடம்பரம். இந்த வில்லாவில் மூன்று பெரிய படுக்கை அறைகளும், பெரிய லிவிங் அறையையும் கொண்டுள்ளது. இந்த வில்லாவின் ஒவ்வொரு கல்லையும் ரசித்து கட்டியிருக்கிறார் மல்லையா.
கையினால் செய்யப்பட்ட தேக்கு மர ஃபர்னிச்சர்கள், ஆடம்பரமான ஹோம் தியேட்டர் சிஸ்டம் ஆகியவை இந்த வில்லாவிற்கான அடையாளம். வில்லாவின் கடைசியில் ஒரு வீடு போன்ற அப்பார்ட்மென்ட்டை கட்டியிருக்கிறார். அதில் கடலை பார்த்தபடி படுக்கும் வசதி கொண்டதாகும். நன்கு சமன் செய்யப்பட்ட புல்வெளிகள் மத்தியில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செடிகள் நிறைந்த பாதை வழியாக சென்றால் கோல்ஃப் மைதானத்திற்கு அழைத்துச்செல்கிறது. இது தவிற நீச்சல் குளங்கள், பார்கள் என எல்லா வசதிகளும் இங்கு உண்டு. பெரும்பாலும் தனக்கு பிடித்த பாலிவுட் நடிகர், நடிகைகளை இங்கே அழைத்து வந்துதான் விருந்து கொடுப்பாராம் மல்லையா. என்ன கருமம் புடிச்ச விருந்தோ தெரியவில்லை? (அதை நீங்கள் ஃபோட்டோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)

மல்லையா பெரும்பாலும் ஹெலிக்காப்டரில் தான் வந்து இறங்குவாராம். இதற்காக பிரத்யேக ஹெலிபேடும் இந்த வில்லாவிற்குள் அமைக்கபப்ட்டிருக்கிறது. மல்லையா விலை உயரந்த கார்களின் மேல் ரொம்ப பிரியம் உள்ளவராம். அவருக்கு பிடித்த சிகப்பு கலர் பெராரியும் உள்ளே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்ன பிற கார்களும் இங்கே நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதனை கையகப்படுத்தியுள்ள பாரத ஸ்டேட் வங்கி இதனை 100 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்போவதாக தெரிவித்துள்ளது. என்னதான் ஏலம் விட்டாலும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கின்ற எவனும் இதை வாங்கமாட்டான். காரணம் அவன் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிக்கும்போது அதன் மதிப்பை அறிந்தே வைத்திருப்பார்ன். மல்லையா போன்ற பெரிய திருடர்களே இதுபோன்ற வில்லாக்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்பதே எதார்த்தம்.
கோவாவில் இது போன்று மற்றொரு கிங்பிஷர் வில்லா இருக்கிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். லிண்டா நாபண் தன்னுடைய கணவர் அசோக்குடன் இணைந்து ஒரு ஐந்து படுக்கையறைக்குக் கொண்ட தாங்கும் விடுதியை அமைத்து அதற்குக் கிங்பிஷர் வில்லா எனப் பெயரிட்டு நடத்தி வருகிறார்.

No comments:
Write comments