கஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இருந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவரான பயங்கரவாதி சையத் சலாஹூதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜம்மு கஷ்மீரில் இராணுவத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அரசும் அந்நாட்டில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளும் முயற்சித்து வருகின்றனர். இதற்காக பாகிஸ்தான் அரசு கருப்பு தினத்தை கடைபிடித்தது. இந்த நிலையில் சர்வதேச பயங்கரவாதியான ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவரான சையத் சலாஹூதீன் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சலாஹூதீன் கூறியுள்ளதாவது: – கஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்துவோம். கஷ்மீரின் தற்போதைய விடுதலைப் போராட்டத்துக்கு தார்மீக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆதரவு கொடுக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை. அப்படி பாகிஸ்தான் எங்களுக்கு ஆதரவு அளித்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத சண்டை ஏற்படுவதற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான 4-வது யுத்தம் என்பது நிச்சயம் காஷ்மீருக்காகத்தான் என கூற முடியும். பாகிஸ்தானோ அல்லது சர்வதேசமோ அல்லது ஐநாவோ ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் தங்களது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்த கஷ்மீர் மக்கள் தீர்மானித்துவிட்டனர். கஷ்மீர் மக்களை பொறுத்தவரை ஆயுதம் தாங்கிய ஜிஹாத் போராட்டத்தைத் தவிர வேறு ஒரு வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சர்வதேசம் சமூகம் தொடர்ந்தும் புறக்கணித்து பாகிஸ்தானின் முயற்சிகள் பலனளிக்காமல் இந்தியாவின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் நிச்சயம் மிகப் பெரிய சம்பவங்கள் நடக்கும். இவ்வாறு சையத் சலாஹூதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஷ்மீர் பற்றி பேச சலாஹுதீன் யார்? பாகிஸ்தான் அரசோ அல்லது அங்கு செயல்படும் எந்த தீவிரவாத குழுவாக இருந்தாலும் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்தால் அதனை எல்லா வழிகளிலும் இந்தியா எதிர்கொள்ளும். இந்திய நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டோம் என உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments