Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 9, 2016

18 வயசில் நானும் அட்ஜஸ்ட் பண்ணி போனேன் - சசிகலா புஷ்பா


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், பதவி விலக தன்னை வற்புறுத்துவதாகவும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாநிலங்களவையில் கூறிய சசிகலா புஷ்பா, பெண்கள் பாதுகாப்பு எங்கே என கேள்வி எழுப்பினார். ஆனால் இன்று சசிகலா புஷ்பாவே இரண்டு பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகை செய்து அவர்களை கொடுமைப்படுத்தியதாக இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். இவர்கள் சசிகலா புஷ்பாவின் சென்னை மற்றும் தூத்துக்குடி வீடுகளில் வேலைபார்த்தவர்கள். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று இவர்கள் சசிகலா புஷ்பா மீது புகார் அளித்தனர். குடிபோதையில் சசிகலா புஷ்பா துன்புறுத்தினார், அவரது கணவரும், மகனும் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளனர்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் கண்ணீர் மல்க பேசினர், சசிகலா புஷ்பா தினமும் ஆடைகளை கழற்றிப்போட்டுதான் தூங்குவாங்க அப்ப நாங்க மசாஜ் பண்ணிவிட்டுகிட்டே இருக்கனும். சசிகலா புஷ்பாவின் மகன் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கார். இது பற்றி சசிகலா புஷ்பாவிடம் சொன்னா, நானும் 18 வயசில அப்படிதான் அட்ஜெஸ்ட் பண்ணி போனேன். நீயும் அப்படி அட்ஜெஸ்ட் பண்ணி போயேன்னு சொல்வாங்க. சசிகலா புஷ்பாவின் மாதவிடாய் கழிவுகளைக் கூடா நாங்கதான் அகற்றனும்.

இந்த கொடுமைகளால் தாங்கள் தற்கொலைக்கு கூட முயன்றதாக அந்த இளம்பெண்கள் கூறியிருக்கிறார்கள். தோசை சுடும் போது தலையை தோசைக்கல்லில் முட்ட வைத்து அடிப்பது போன்ற கொடுமைகளை செய்த சசிகலா புஷ்பாவுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதே போல் சசிகலா புஷ்பா தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு முன்பு கடந்த முறை தூத்துக்குடி மேயராக செயல்பட்டவர் தான் இந்த சசிகலா புஷ்பா. இவரின் பல காம லீலைகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவர் விமானநிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் திமுக எம்.பி திருச்சி சிவாவோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. இவர் தூத்துக்குடி பகுதியைச்சேர்ந்த ஒருவரோடு பேசிய தொலைபேசி உரையாடலில் தான் கடந்த இரவு சரியான போதையில் இருந்ததாகவும், போன் பேசியிருந்தால் உளறியிருப்பேன், ஆதலால் தான் ஃபோன் அடிக்கவில்லை என்று பேசியிருக்கிறார்.

அதேபோன்று சென்னை பாரிஸ் அருகில் உள்ள ஏழுகிணறு பகுதியில் வசித்து வந்தவர் பிலால். இவர் அதிமுக தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்திருக்கிறார். சசிகலா புஷ்பா தூத்துக்குடி மேயராக இருக்கும்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து போகும் சமயத்தில் பிலாலுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் பல முறை ரகசியமாகவும் சந்தித்திருக்கின்றனர். இது தொடர்பாக சென்னை மண்ணடியில் சமூக ஆர்வளராக செயல்பட்டு வந்த முத்து என்பவர் கூறும்போது "ஒரு முறை எங்களுக்கு ஏழு கிணறு பகுதியிலிருந்து பிலால் என்பவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முனைகிறார் என்றும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்ட செல்ல முனைகிறார். எனவே தயவு செய்து அவரிடம் பேசி அவரை திருத்துமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே எஸ்.டி.பி.ஐ கட்சியின் அப்போதையை தொகுதி தலைவராக செயல்பட்டு வந்த சுல்தான் உடன் சென்றபோதுதான் பிலாலை சந்தித்தோம். அவர் தான் மதம் மாறியிருப்பதாகவும், தன்னால் குடும்பத்தினருடன் வசிக்க முடியாது என கூறினார். அவரது செல்போனை சோதித்து பார்க்கும்போது தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பாவுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படமும் இருந்தது" என கூறினார்.

மேற்கொண்ட செய்திகளை பார்க்கும்போது சசிகலா புஷ்பாவின் காம லீலைகள் உண்மைதான் என தெரியவருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic